உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா.? இதோ

Published By: Robert

11 Jan, 2016 | 11:24 AM
image

உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சந்தோஷமான ஒரு விஷயம். 

கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ தினமும் எடுத்து வருவதால் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.

மேலும், இது செரிமான பிரச்சனைகளைப் போக்கும். செரிமான பிரச்சனையில் அவதிப்படுபர்கள் கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும்.

உடலில் இருந்து நச்சுக்கள் அவ்வப்போது வெளியேற்றப்பட்டுவிட்டால், உடல் பருமன் ஏற்படாது. ஆகவே தினமும் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன் சேர்த்து குடித்து வரலாம். இச்செயலால் மிகவும் வேகமாக உடல் எடை குறைவதை நீங்கள் காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right