பண்டிகை காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பும்  பயணிகள் ரயிலின் மிதிபலகையில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சன நெரிசல் அதிகமாக இருப்பதால் பயணிகள் மிதிபலகையில் செல்லும் பொருட்டு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனை தவிர்த்துக்கொள்வதால் விபத்துகள் ஏற்படாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.