எம்.எம்.மின்ஹாஜ்

Image result for பைசர் முஸ்தபா virakesari

புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

இதன்பின்னர் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு தேர்தலுக்கு அறிவிப்பு விடுக்கப்படும். மேலும் மாகாண சபை தேர்தலும் இவ்வருடம் நடத்தப்படும். குறித்த தேர்தல் விகிதாசார முறைமையின் பிரகாரம் நடத்தப்படும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.