மக்கள் வங்கி ஜூலை 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட, தற்போது அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இதனையொட்டி, மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அந்த வகையில் மக்கள் வங்கியின் பௌத்த சங்கத்தால் ஆசிகள் வேண்டும் நிகழ்வு ஜுலை 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
முதல் நாள் இரவு முழுவதும் பிரித் பாராயணம் ஓதும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், அடுத்த தினத்தில் அறுபத்து மூன்று மகாநாயக்கர்களுடன் தான நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
மக்கள் வங்கியின் இந்து சங்கம், முஸ்லிம் சங்கம் மற்றும் கிறிஸ்தவ சங்கம் ஆகியனவும் சமய நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சமய நிகழ்வுகளின் போது நாட்டுக்கும், மக்களுக்கும், வாடிக்கையாளர்களும், மக்கள் வங்கியை ஸ்தாபிப்பதில் முன்னோடிகளாக செயற்பட்ட தலைவர்களுக்கும், கடந்த கால மற்றும் தற்போதைய பணியாளர்களுக்கும் ஆசிகள் வேண்டி மத வழிபாடுகள் இடம்பெற்றன.
மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச, பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா, வங்கியின் ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் என பலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
மக்கள் வங்கியின் 63வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக, மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இரத்ததான முகாமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பெரும் எண்ணிக்கையில் வங்கி ஊழியர்கள் இரத்ததானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM