பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதில் ஆளும், எதிர்க்கட்சிக்கிடையில் சபையில் வாக்குவாதம்

Published By: Digital Desk 7

25 Jul, 2024 | 03:47 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை அரசியலமைப்பு பேரவையே முன்னெடுக்க வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்த கருத்தினால் சபையில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாராளுமன்றம் வியாழக்கிழமை (25)  பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரதேமதாச எழுந்து, பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிரப்பித்துள்ள நிலையில், பிரதி பொலிஸ்மா அதிபர் நியமிக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்பி வருகிறது. அதனால் உடனடியாக பிரதி பொலிஸ்மா அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில், அரசிலமைப்பு பேரவை நிறைவேற்று அதகாரியின் ஒரு பகுதி என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பொலிஸ்மா அதிபர் நியமனத்தை ஜனாதிபதியே மேற்கொண்டார். அரசியலமைப்பின் 21 ஆம் திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்பு பேரவையில் நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்க முடியும். அதுதான் நேற்று முன்தினம் உயர் நீதிமன்றில் இடம்பெற்றிருக்கிறது. பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தற்போது பொலிஸ்மா அதிபருக்கு இடைக்கால தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதன் பிரகாரம் செயற்படுவது அரசாங்கத்தின்  கடமை. அதன் பின்னர் தீர்ப்புக்கு எதிராக முறையிடலாம். அவ்வாறு இல்லாமல் வேண்டுமென்றே அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்பை செயற்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தால், ஒட்டுமொத்த அமைச்சரவையும் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகிறது. அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும்.

அத்துடன் நீதிமன்ற தீர்ப்பில் சட்டமா அதிபருக்கு எதிராகவும் சபாநாயகருக்கு எதிராகவும் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் வெட்கப்படவேண்டும். அதனால் அட்டை போன்று தொடர்ந்தும்  தொங்கிக்கொண்டிருக்காமல் அரசாங்கம் விட்டுச்செல்ல வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிடுகையில், பிரதிபொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு மீண்டும் அரசியலமைப்பு பேரவையை அழைத்து, அதற்கு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவதற்கு இனங்க முடியாது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பொலிஸ்மா அதிபருக்கு தற்போது அந்த சேவையில் ஈடுபட முடியாது. அந்த பதவி வெற்றிடமானால், அந்த இடத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கே இருக்கிறது. பதில் பொலிஸ்மா அதிபர் நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கு இல்லை என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகையில், பதில் சட்டமா அதிபர் நியமனத்தை ஜனாதிபதிக்கு நியமிக்க முடியுமானால் ஏன் பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதிக்கு முடியாது? அதனால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சரும் சபை முதல்வருமான சுசில் பிரேமஜயந்த பதிலளிக்கையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்காக அனுமதி வழங்கியது அரசியலமைப்பு பேரவை. அதனால் இது பாராளுமன்றத்துடன் சம்பந்தப்பட்டது அல்ல. பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்ம் இடைக்கால தடை உத்தரவு பிரப்பித்துள்ள நிலையில் பதில் பொலிஸ்மா அதிபரை யார் நியமிப்பது என்பதில் பிரச்சினை இருக்கிறது. அதனால் அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகருக்கு இந்த பிரச்சினையை முன்வைத்து, அவர் நாட்டுக்கு வந்த பின்னர் இதுதொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கட்டணம் குறைக்க முடியாமைக்கு மின்சாரசபை...

2024-12-11 20:40:02
news-image

பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி விநியோகிப்பதை...

2024-12-11 17:47:21
news-image

தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில் சமூகத்தை இணைத்து...

2024-12-11 17:33:18
news-image

குரங்குகள் மீது பழி சுமத்தி தப்பித்துக்கொள்ள...

2024-12-11 20:41:12
news-image

சீன விஜயத்தின் போது குரங்குகள் குறித்த...

2024-12-11 17:48:14
news-image

பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளிக்...

2024-12-11 17:01:27
news-image

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் ...

2024-12-11 18:37:22
news-image

எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக...

2024-12-11 17:31:13
news-image

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு...

2024-12-11 20:39:17
news-image

மர்ம காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் தாய்...

2024-12-11 18:23:40
news-image

மோட்டார் சைக்கிள் - ஜீப் வாகனம்...

2024-12-11 18:03:42
news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பி. ...

2024-12-11 18:39:14