ஈழத்தின் கலை இலக்கியத்துறையில் ஒன்றரை தசாப்தத்துக்கும் மேலாக பயணிக்கும் எழுத்தாளர் வன்னியூர் செந்தூரனின் கவிதைகள் (5வது நூல்) நூல் வெளியீடானது அடங்காப்பற்று தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கீர்த்தனா படைப்பகத்தின் வெளியீடாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவரும் மூத்த தமிழ் வித்தகருமான கலாநிதி தமிழ்மணி அகளங்கனின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி தேர்தல் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், கௌரவ விருந்தினர்களாக திருவையாறு மகா வித்தியாலயத்தின் அதிபர் விக்கினராஜா, IDM Nation Campusஇன் வடக்கு, கிழக்கு பணிப்பாளர் கலாநிதி அன்ரூஸ் அனஸ்லி, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான துளசி, முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் இ.சஜீதரலீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மங்கல விளக்கேற்றல், அக வணக்கத்தை தொடர்ந்து, வரவேற்புரையினை கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியரும் எடிசன் கல்வி நிலைய இயக்குநருமான ஆசிரியர் ஜெயசுதனும் வெளியீட்டுரையை ஈழத்துப் படைப்பாளி வன்னியூர் வரன், நூலாசிரியர் வன்னியூர் செந்தூரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
தொடர்ந்து நூல் வெளியீட்டின்போது முதல் பிரதியை கலாநிதி தமிழ்மணி அகளங்கனிடமிருந்து பிரதம விருந்தினராக வருகைதந்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பெற்றுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM