கண்டி, பல்லேகல தும்பர சிறைச்சாலையின் கைதியொருவர் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளை கடுமையாக தாக்கியுள்ளார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எழுபது வயதுப் பெண்ணின் தலையில் சுத்தியலால் தாக்கி கொலை செய்து தங்க நகைகளை அறுத்துச் சென்றதாக கைதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி நேற்று புதன்கிழமை (24) காலை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன்போது, ஹுன்னஸ்கிரிய மற்றும் உடுதும்பர பகுதிக்கு இடையில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் சார்ஜன்ட் ஆகியோரை கைதி கடுமையாக தாக்கியுள்ளார்.
கைதியின் தாக்குதலில் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் மூன்று மணித்தியாலம் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மற்றைய அதிகாரியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM