(நெவில் அன்தனி)
ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (24) பிற்பகல் நடைபெற்ற பி குழுவுக்கான மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மலேசியாவை 114 ஓட்டங்களால் முன்னாள் சம்பியன் பங்களாதேஷ் வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது.
முர்ஷிதா கான், அணித் தலைவி நிகார் சுல்தானா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் பங்களாதேஷின் இலகுவான வெற்றிக்கு அடிகோலின.
மலேசியாவுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைக் குவித்தது.
டிலாரா அக்தர் (33 ஓட்டங்கள்), முர்ஷிதா காத்துன் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 46 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டில் நிகார் சுல்தானாவுடன் மேலும் 89 ஓட்டங்களை முர்ஷிதா சுல்தான் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார்.
முர்ஷிதா கான் 80 ஓட்டங்களையும் அணித் தலைவி நிகார் சுல்தானா ஆட்டம் இழக்காமல் 62 ஓட்டங்களையும் டிலாரா அக்தர் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் எல்சா ஹன்டர் (20), மஹிரா இஸாட்டி இஸ்மாயில் (15), வென் ஜூலியா (11) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் நஹிதா அக்தர் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டியில் வெற்றியீட்டிய பங்களாதேஷ், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது.
ஆட்டநாயகன் முர்ஷிதா காத்துன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM