(நெவில் அன்தனி)
ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (24) நடைபெற்ற பி குழுவுக்கான கடைசி மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்ட இலங்கை 10 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் பி குழுவிலிருந்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற இலங்கை, வெள்ளிக்கிழமை (26) நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடவுள்ளது.
இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் தாய்லாந்தை 93 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை, 11.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 94 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.
அணித் தலைவி சமரி அத்தப்பத்து 35 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 49 ஓட்டங்களுடனும் விஷ்மி குணரட்ன 39 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தாய்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் நன்னாபட் கோன்ச்சாரோன்காய் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரை விட அணித் தலைவி திப்பட்ச்சா புத்தாவொங் 13 ஓட்டங்களையும் அப்பிசரா சுவன்ச்சோன்ரதி 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகி: சமரி அத்தபத்து.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM