காலி - எல்பிட்டி தனியார் பஸ்ஸொன்றில் இருந்து பாடசாலை மாணவி ஒருவர் கீழே விழுந்ததில் குறித்த பஸ் வண்டியின் சில்லில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படபொல மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய பஸ்வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.