இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் உயிர் துறந்த தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, தமிழின வறலாற்றில் என்றுமே மறக்கமுடியாத 'வெலிக்கடை சிறைப் படுகொலை' இடம்பெற்ற தினமான நாளை வியாழக்கிழமை (25) மாலை 3.05 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள 'தந்தை செல்வா கலையரங்கில்' ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
சமூகத்தின் பெயரில் இலங்கை சிறைகளுக்குள் இரையாக்கப்பட்ட எமது உறவுகளை உணர்வுபூர்வமாக நினைவுகூரும் இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் அரசியல் கைதிகள், சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவ மற்றும் ஆசிரியர் சமூகத்தினர், ஊடகத்துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளுமாறு 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு அழைப்பு விடுக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM