உருகுவே நாட்டில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மருந்துக்கடைகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்காக அங்குள்ள 16 மருந்துக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மாதமொன்றுக்கு ஒருவருக்கு 40 கிராம் கஞ்சாவே விற்பனை செய்யப்படுமெனவும் உருகுவே அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், உலகிலேயே சட்டபூர்வமாக போதைப்பொருளை பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக மருந்துக்கடைகளில் விற்பனைக்கு அனுமதிக்கும் முதல் நாடாக தென்அமெரிக்க நாடான உருகுவே விளங்கவுள்ளது.

2013 ஆம் ஆண்டு கஞ்சா வர்த்தகத்தை சட்டபூர்வமாக்கும் வகையில இயற்றப்பட்ட சட்டத்தோடு இந்த நடவடிக்கை ஆரம்பமாகியது. இருப்பினும் இந்த சட்டத்தை செயல்படுத்துவது மிகவும் மெதுவாகவே நடைபெற்று வந்துள்ளது.