(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)
கொவிட்டில் மரணித்து தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை அரசாங்கம் தொடர்ந்தும் மறைக்காமல் அதனை வெளிப்படுத்த வேண்டும். எல்லாவற்றையும் செய்துவிட்டு மன்னிப்பு மாத்திரம் கோரி முடித்துக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணித்த முஸ்லிம் சமூகத்தின் சடலங்களை எரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு மன்னிப்பு கோருவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்யபட்ட விடயம் தொடர்பில் பல தடவைகள் இந்த சபையில் கேள்வி எழுப்பி இருந்தேன். கொவிட் தகனத்துக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம் பிரஜைகளின் பெயர் பட்டியலை வழங்குமாறு முன்னாள் சுகாதார அமைச்சரிடம் இந்த சபையில் கேட்டேன். அதற்கு அவர், அவ்வாறான எந்த தகவலும் இல்லை என அவர் தெரிவித்திருந்தார். இது உண்மையை மறைப்பதற்கு செய்யும் நடவடிக்கை. அதனால் தகனத்துக்குள்ளானவர்களின் பெயர் பட்டியலை அரசாங்கம் தரவேண்டும்.
அரசாங்கம் எல்லாவற்றையும் செய்துவிட்டு முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோரிலிட்டு இதனை முடித்துக்கொள்ள முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கவேண்டும். இதற்கு காரணமானவர்களின் பெயர் பட்டியலை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்த முஜிபுர் ரஹ்மான் குறிப்பிடுகையில்இ தகனம் செய்தமைக்கு மன்னிப்பு கோர அரசாங்கம் தீர்மானத்துள்ளதன் மூலம் இந்த நடவடிக்கை பலவந்தமாக செய்யப்பட்டது என்பது உறுதியாகி இருக்கிறது. இது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால் இதனை யார் செய்தார்கள் என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். கொவிட் மரணம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு சுகாதார வழிகாட்டல் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக வைத்தியர் சன்ன ஜயசுமன தலைமையிலான குழுவின் அறிக்கையை மாத்திரமே பின்பற்றி வந்தது.
என்றாலும் இதற்கு கடும் எதிர்ப்பு வர ஆரம்பித்த பின்னர், சர்வதேசத்தி்ன் அழுத்தத்துக்கு மத்தியில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கினார்கள். மாறாக விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் இந்த அனுமதி வழங்கப்படவில்லை.அதனால் அடக்கும் செய்வதற்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி இருந்தும் அதற்கு அனுமதி வழங்காமல் தகனம் செய்ய வேண்டும் என தெரிவித்தவர்கள் யார் என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். இவரகள்தான் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த மருக்கார் எம்.பி குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் மன்னிப்பு கோரும் தீர்மானம் ராஜபக்ஷவினரை பாதுகாப்பதற்கான நடவடிக்கை. தகனம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் அரசியல் தீர்மானமாகும். அதனால் இதற்கு காரணமானவர்கள் யார். அவர்களை இனம் கண்டு, வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த ஏ.எல்.எம்.அதாவுல்லா குறிப்பிடுகையில்,
கொவிட் மரணங்களை எரித்தமை தொடர்பில் அமைச்சரவை மன்னிப்பு கோருவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி, பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.ஆனால் பாராளுமன்றத்துக்கு தெரியாமல் கொவிட் மரணங்களை எரிப்பதற்கு முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாரச்சி வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்ருந்தார். இது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் நடவடிக்கை இது தொடர்பாக நான் அன்று கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன்.
எனவே மன்னிப்புடன் இதனை முக்காமல், பாராளுமன்றத்துக்கு தெரியாமல் வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டமை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இந்த நடவடிக்கைக்கு எதிராக யாருக்கு தண்டனை கொடுக்கப்போகிறோம் என்பதை இந்த பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM