(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)
கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணித்த முஸ்லிம் சமூகத்தின் பூதவுடல்கள் தகனம் செய்யப்பட்டமைக்கு மன்னிப்பு கோருவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை வரவேட்கிறோம். அத்துடன் மன்னிப்புடன் மாத்திரம் இதில் இருந்து தப்பிக்க அரசாங்கத்துக்கு முடியாது.
இதற்கு காரணமானவர்களின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கொவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் சடலங்களை தகனம் செய்தமைக்கு மன்னிப்பு கோருவதற்கு அரசாங்கம் அமைச்சரவை தீர்மானம் எடுத்திருப்பதை வரவேட்கிறேன். கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களின் மத கலாசாரத்தை சீரழித்து, இனவாத அடிப்படையில் முஸ்லிம் மக்களை இலக்குவைத்தே இந்த தீர்மானத்தை அன்று அமைச்சரவையில் இந்த தீர்மானத்தை எடுத்தனர்.
இதற்கு தற்போது அமைச்சரவையில் இருக்கும் சிலர் ஆதரவளித்தனர். என்றாலும் இந்த நடவடிக்கையை விட்டு விடுவதற்காக தற்போதாவது இடம்பெற்ற சம்பவத்துக்காக மனிப்புகோர எடுத்த தீர்மானத்தை மதிக்கிறேன்.
அதேநேரம் கொவிட் தொற்றில் மரணத்தவர்களை எரிப்பதற்கு யாருடைய அறிக்கையின் அடைப்படையில் இந்த பிழையான தீர்மானம் எடுக்கப்பட்டது? இதற்கு ஆலாேசனை வழங்கியது யார்.
வழங்கிய ஆலாேசனையை ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் அதிகாரிகள் ஏன் ஆராய்ந்து பார்க்கவில்லை? உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலை புறந்தள்ளிவிட்டு, ஏன் இந்த அநீதியை முஸ்லிம் சமூகத்துக்கு செய்தீர்கள்.
அத்துடன் தற்போது கொவிட் சடலம் எரிப்பு தொடர்பில் திரைப்படம் தயாரிப்பதாக தெரியவருகிறது. இதனுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளை பாதுகாப்பதற்கே இதனை செய்கிறார்கள். இதற்காக வெட்கப்படவேண்டும்.
அந்த காலப்பகுதியில் இதற்கு எதிராக வீதிக்குகூட இறங்கவில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட கீழ்த்தரமான செயலுக்கு எதிராக நாங்கள் அச்சப்படாமல் வீதிக்கு இறங்கினோம்.
அதனால் அரசாங்கம் மன்னிப்புகோரி மாத்திரம் இந்த விடயத்தில் இருந்து தப்பிக்க முடியாது. இந்த தவறான ஆலாேசனை வழங்கியவர்களின் பெயர்களை சபைக்கு வெளிப்படுத்த வேண்டும். அதேபோன்று கொவிட் தொற்றுக்குள்ளாகி தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் நபர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM