(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பெருந்தோட்ட மக்களின் 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஆகவே பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கத்தின் உண்மை நிலைப்பாடு என்ன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (24) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதாக ஜனாதிபதி கடந்த மே மாதம் 01 ஆம் திகதி குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.இந்த வர்த்தமானி கடந்த மே மாதம் 21 ஆம் திகதி திருத்தம் செய்யப்பட்டது.
இவ்வாறான நிலையில் கடந்த 10 ஆம் திகதி சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் வெளியிடப்பட்ட சகல வர்த்தமானிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன?
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது. ஆகவே அரசாங்கத்தின் நிலைப்பாட்டை குறிப்பிடுங்கள் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க, பெருந்தோட்ட மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.சம்பள அதிகரிப்புக்கு எதிராக தோட்ட கம்பனிகளே நீதிமன்றம் சென்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM