பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 74 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அஷாம் ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களையும், இமாட் வசீம் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் கேப்ரியல் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 44.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

மே.தீவுகள் சார்பில் ஜேசன் ஹோல்டர் 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாபர் அஷாம் தெரிவுசெய்யப்பட்டதுடன், பாகிஸ்தான் அணி தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.

இதேவேளை தொடரை தீர்மானிக்கும் இறுதி ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.