ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட 3 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை புற நகர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (22) அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான அதிகாரிகள் கடற்கரை பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 3 நபர்களை ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்ததுடன் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.
இவ்வாறு கைதானவர்கள் 21, 26, 28 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் 520 மில்லி கிராம், 980 மில்லி கிராம், 530 மில்லி கிராம், ஐஸ் போதைப்பொருட்கள் சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே போதைப்பொருள் நுகர்தல் மற்றும் விற்பனை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM