வவுனியாவில் இன்று (10) காலை 10.15 மணியளவில் எண்ணை விநியோகம் மேற்கொள்ளும் ரயில் வவுனியாவில் தடம்புரண்டுள்ளது.


அனுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்கு எண்ணை சேவையினை மேற்கொண்டு வரும் ரயில் இன்று காலை வவுனியா புகையிரத நிலையத்தில் வந்து, எண்ணை கொண்டு வந்த கொள்கலன்களை வவுனியாவில் நிறுத்திவிட்டு திரும்பிச் செல்லும்போது சமிக்ஞை சரியாக வழங்கப்படாத காரணத்தினால் தண்டவாளத்திலிருந்து ரயில் தடம்புரண்டு, அருகிலுள்ள புகையிரத நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் விடுதிக்கு அருகில் சென்றுள்ளது. எனினும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 
ரயிலினை அப்பகுதியிலிருந்து அகற்ற ரயில் நிலைய ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.