கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை அண்டிய கடற்கரை பகுதியில் கடலரிப்பினால் வெளியாகியுள்ள நிலையில் அங்கு விளையாட்டில் ஈடுபட்டவர்களால் கண்டெடுக்கப்பட்டு குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (23) மாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி 2 தோட்டாக்களுடன் (ரிவோல்வர்) இயங்குநிலையில் காணப்படுவதுடன், ஜேர்மனி நாட்டு தயாரிப்பில் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் எந்தவொரு சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM