மட்டக்களப்பு பூநொச்சிமுனையில் மோப்ப நாய்கள் சகிதம் இராணுவம், பொலிஸார் பாரிய சுற்றி வளைப்பு

Published By: Digital Desk 7

24 Jul, 2024 | 09:55 AM
image

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பச்சை வீட்டு திட்டம் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (24) காலை இராணுவத்தினர், பொலிசார் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கென மோப்ப நாய்களின் உதவியும் பெறப்பட்டிருந்தது.

கடந்த 15 ஆம் திகதி குறித்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் கடந்த 22 ஆம் திகதி  குறித்த வீட்டின் முன்பாக இருந்து கண்டெடுக்கப்பட்ட கைகுண்டு சம்பவங்களைத் தொடர்ந்து மேற்படி சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .

அதிகாலை ஆரம்பித்த இச்சுற்றிவளைப்பு தேடுதலின் போது பொலிஸாரும் இராணுவத்தினரும் விஷேட அதிரடிப்படையினரும் வீடு வீடாக சென்று மோப்ப நாய்கள் சகிதம் தேடுதல் நடத்தினர்.

சுமார் 35 வீடுகள் இவ்வாறு சுற்றி வளைப்பு தேர்தல் நடவடிக்கை உட்படுத்தப்பட்டதாகவும் இதில் 28 பொலிஸார், 10 விசேட அதிரடிப் படையினர், 22 இராணுவத்தினர் என சுமார் 60 படையினரும் , பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:33:37
news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58