(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)
2019 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த ஜூன் மாதம் வரை 4,74, 142 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு சென்றுள்ளனர். அவர்களில் 3 இலட்சத்து 1198 பேர் வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் புரிகின்றனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) ராஜிகா விக்ரமசிங்க எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2019 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த ஜூன் மாதம் வரை 4,74, 142 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு சென்றுள்ளனர். அவர்களில் 3 இலட்சத்து 1198 பேர் வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் புரிகின்றனர். அத்துடன் 3 லட்சத்து 62 ஆயிரத்து 943 பேர் பயிற்சி பெற்றவர்களாகவும் ஒரு இலட்சத்து 1199 பேர் பேர் பயிற்சி பெறாத நிலையிலும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களின் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேற்கொண்டு வருகிறது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு சென்றுள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. காப்புறுதி மூலமான பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த நாடுகளில் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் அந்த நாடுகளில் தொழில் பிணக்குகளை தீர்ப்பதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று அவர்களுக்கான பாதுகாப்பு இல்லங்களும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு நாங்கள் அவ்வாறான சிக்கல்களுக்கு அகப்படுவோர் தொகை மிக மிக குறைவாகவே காணப்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM