(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கோப் மற்றும் கோபா போன்ற தெரிவுக் குழுக்கள் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை அழைத்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது முக்கியமாகும் என நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
கோப் மற்றும் கோபா போன்ற தெரிவுக் குழுக்கள் மூலம் விநியோகிக்கப்படும் அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் சபையில் கருத்துக்களை முன் வைக்கும் போதே நிதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
கோப் மற்றும் கோபா போன்ற தெரிவுக் குழுக்கள் மூலம் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது நேரடியாகவே சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அதனை அனுப்பக்கூடிய அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது.
2007 ஆம் ஆண்டு நான் முன்வைத்த கோப் அறிக்கைகள் இரண்டில் 16மோசடியான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் யோசனையை நிறைவேற்றி அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு அது அனுப்பப்பட்டது.
அதேபோன்று மேலும் 10 அல்லது 11 நிறுவனங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக அது பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டது.
அந்த நிறுவனங்களினால் அனுப்பப்படும் முறைப்பாடுகள் சபாநாயகரினால் அனுப்பப்பட்டாலும் உரிய நிறுவனங்கள் அது தொடர்பில் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.
அதனைக் கவனத்திற் கொண்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை அழைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவது அவசியம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM