நடிகர் சூர்யா - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் தயாராகும் 'சூர்யா 44' படத்தை பற்றிய பிரத்யேக தகவல்களை படக்குழுவினர் காணொளியாக வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் சுஜித் சங்கர், தமிழ், ராமச்சந்திரன், பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்தத் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தற்போது இப்படத்தில் அவரின் தோற்றம் குறித்த காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர் சூர்யா வாயில் சிகரட்டும், கையில் துப்பாக்கியுடனும் தோன்றுவது... அவரது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மேலும் விரைவில் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM