(நெவில் அன்தனி)
ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக அரங்கேற்றப்பட்ட 2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டி தொடர்பாக மீளாய்வு செய்யப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உறுதி செய்துள்ளது.
இந்த மீளாய்வை மேற்பார்வை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு ரொஜர் டூஸ், லோசன் நாயுடு, இம்ரான் கவாஜா ஆகிய மூன்று பணிப்பாளர்களை கொண்ட குழுவை சர்வதேச கிரிக்கெட் பேரவை நியமித்துள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகளின் போது செலவிடப்பட்ட தொகை மற்றும் கரிபியன் தீவுகளில் நடைபெற்ற போட்டிகளின்போது ஏற்பாடுகளில் நிலவிய குறைபாடுகள் ஆகியன தொடர்பாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில், கொழும்பில் ஜூலை 19ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிவரை நடைபெற்ற ஐசிசி வருடாந்த மாநாட்டின்போது இந்தக் குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
ஐசிசி வருடாந்த மாநாட்டில் 108 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் 2030இல் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கையை 16ஆக அதிகரிப்பதற்கான அங்கீகாரத்தையும் ஐசிசி இந்தக் கூட்டத்தின்போது வழங்கியது.
2009இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் எட்டு அணிகள் பங்குபற்றியதுடன் 2016இல் அந்த எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது.
பங்களாதேஷில் இந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் 10 அணிகளே பங்குபற்றுகின்றன.
2026இல் நடைபெறவுள்ள ரி20 உலகக் கி;ண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 12ஆக இருக்கும். அதற்கான கடைசி அடைவுமட்ட திகதி 2024 அக்டோபர் 31ஆம் திகதியாகும்.
நான்கு வருடங்கள் கழித்து 2030இல் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 16ஆக அதிகரிக்கப்படும்.
2026இல் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பிராந்திய ரீதியில் தகுதிபெறவுள்ள அணிகளின் எண்ணிக்கையையும் ஐசிசி வெளியட்டுள்ளது.
ஆப்பிரிகா மற்றும் ஐரோப்பாவிலிருந்து தலா இரண்டு அணிகள், அமெரிக்காவிலிருந்து ஒரு அணி, ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா பசிபிக் (நுயுP) ஆகிய இரண்டு பிராந்தயங்களிலிருந்தும் கூட்டாக மூன்று அணிகள் தகுதிகாண் சுற்றின் மூலம் இணைக்கப்படும். இதற்கு முன்னர் ஆசியாவுக்கு இரண்டு இடங்களும் கிழக்கு ஆசயா பசுபிக்குக்கு ஒரு இடமும் வழங்கப்பட்டது.
ஐசிசி இணை அங்கத்துவ அந்தஸ்துக்கு ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவனமும் கிரிக்கெட் சிலியும் இணங்கத்தவறியதால் அந்த இரண்டு அமைப்புகளுக்கும் முறைப்படி தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐசிசி அறிவித்தது.
அந்த இரண்டு அமைப்புகளுக்கும் திருத்தம் செய்ய 12 மாதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM