தமிழ் திரையுலகின் பொக்ஸ் ஓபீஸ் நாயகரான சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் 'கங்குவா' படத்தில் இடம்பெறும் நெருப்பை பற்றிய பாடலும் பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் பிரம்மாண்டம்- அதிரும் இசை - ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கங்குவா' எனும் திரைப்படத்தில் சூர்யா, திஷா படானி, பாபி தியோல், நட்டி என்கிற நட்ராஜ், ஜெகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், தீபா வெங்கட், கே. எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி எக்சன் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யூ வி கிரியேசன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 10 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நெருப்பை பற்றிய 'ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுத, பின்னணி பாடகர்கள் வி. எம். மகாலிங்கம் - செந்தில் கணேஷ் - செண்பகராஜ் - தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். ''ஆதி நெருப்பு ...ஆறாத நெருப்பு... மாய நெருப்பு ... மலை நெருப்பு... பாயும் நெருப்பு .. பாதாள நெருப்பு... காவல் நெருப்பு... காட்டு நெருப்பு... மாறாத நெருப்பு... என அக்னியை போற்றும் வகையில் பாடல் வரிகள் இருப்பதாலும்... உணர்வெழுச்சி தரக்கூடிய தாள லயத்தில் பாடல் அமைந்திருப்பதாலும்... பாடகர்கள் உச்ச ஸ்தாயியில் பாடுவதாலும்... இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை பெற்று சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM