கடந்த தசாப்தங்களில் மண் சார்ந்த படைப்புகளை நேர்த்தியாக வழங்கி உலக தமிழர்களிடத்தில் நற்பெயரை சம்பாதித்த இயக்குநரும், நடிகருமான சேரன், 'நரி வேட்டா' எனும் படத்தின் மூலமாக மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.
டிஜிட்டல் தளங்களின் வருகை மற்றும் ஆதிக்கத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. பான் இந்திய திரைப்படம் என்ற படைப்புகள் அறிமுகமாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராந்தியங்களிலும் உள்ள திரையுலகினர் ஏனைய திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களை வைத்து, பான் இந்திய அளவிலான படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்கள். அந்த வகையில் மலையாள திரையுலகின் நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்தவரும், பான் இந்திய நட்சத்திரமாக கருதப்படுபவருமான டொவினோ தாமஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'நரி வேட்டா 'எனும் திரைப்படத்தில் அவருடன் நடிகர் சேரன் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும், படத்தின் தொடக்க விழாவும் கேரளத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் அனு ராஜ் மனோகர் இயக்கத்தில் உருவாகும் 'நரி வேட்டா ' எனும் திரைப்படத்தில் டொவினோ தாமஸ் , சுராஜ் வெஞ்சரமூடு, சேரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தியன் ஃபிலிம் கம்பனி எனும் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியை பின்பற்றி உலகநாயகன் கமல்ஹாசன், கிராமத்து நாயகன் சசிகுமார் உள்ளிட்ட ஏராளமான தமிழ் நடிகர்கள் வேற்று மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த பட்டியலில் இயக்குநரும், நடிகருமான சேரனும் இணைந்திருக்கிறார். விரைவில் சேரனும் பான் இந்திய குணச்சித்திர நடிகராக உயர வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM