மது போதையில் மோட்டார் சைக்கிளை வீதி முழுவதும் அங்கும் இங்குமாக செலுத்தி வந்த இரு இளம் பெண்கள் களுத்துறை, வடியமண்கட சந்தியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமண நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு அங்கு மது அருந்திவிட்டு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்தப் பெண்கள் பாணந்துறையிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் எனவும் வாதுவை நகரில் ஒரு விடுதியில் தங்கியிருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெண், கடும் போதையில் நிற்க முடியாது தள்ளாடியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.