இன்றைய சூழலில் கலாச்சார மோகம் அதிகரித்து வரும் தருணத்தில் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் குறித்து இளைய தலைமுறையினர் அறிவியல் பூர்வமான விளக்கங்களை கேட்பதும் அதற்கு கடந்த தலைமுறையினர் பதிலளிக்காமல் மௌனம் காப்பதாலும் பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்பது குறைந்து வருகிறது. காதல் திருமணம் என்பது அதிகரித்து வருகிறது என சமூக செயற்பாட்டாளர்கள் ஆய்வின் அடிப்படையில் இந்த கருத்தினை முன் வைக்கிறார்கள்.
இந்நிலையில் சோதிடமும், ஆன்மீகமும் காதலுக்கு எதிரானது அல்ல. பார்வையில் தொடங்கி காதல் அரும்பி திருமணத்தில் முடியும் காதலுக்கும் ஜோதிடர்கள் ஏராளமான பயனுள்ள குறிப்புகளை அளித்திருக்கிறார்கள் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பொதுவாக இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் மனதைக் கவர்ந்த பெண்ணிடமோ அல்லது இணையிடமோ காதலை தெரிவிக்கும் தருணம் என்பது முக்கியமானது. ஏனெனில் காதல் தொடர்பான விருப்பத்தை தெரிவிக்கும் தருணம் என்பது தவிர்க்க இயலாத தருணம் மட்டுமல்ல மறக்க இயலாத தருணமும் ஆகும்.
ஒருவருக்கு அந்தத் தருணத்திலேயே காதல் கை கூடாமல் போகலாம். வேறு சிலருக்கு காதலை தெரிவித்து, காதலை வளர்த்துக் கொண்டு, அதனை திருமணத்தில் உறுதிப்படுத்துவதற்காக பெற்றோர்களிடத்தில் சொல்லும்போது அங்கு அவர்களின் காதல் கை கூடாமல் பிரிவை ஏற்படுத்தலாம்.
அதனால் சோதிடர்கள்- காதல் கை கூடவும், ஆண் மற்றும் பெண் தங்களின் இணையிடம் காதலை தெரிவிக்கும் தருணம் - காதலர்கள் தங்களது காதலை பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கும் தருணம்- ஆகியவை முக்கியமானதாக இருக்கிறது. இந்த நிலையில் சோதிட நிபுணர்கள் ரேவதி, ரோகிணி, ஹஸ்தம் என மூன்று நட்சத்திர நாளை குறிப்பிடுகிறார்கள். இந்த மூன்று நட்சத்திர நாளில் உங்கள் காதலை உங்களின் இணையிடம் தெரிவிப்பதற்கு ஏற்ற நாளாகும்.
இந்த நாளில் நீங்கள் காதலை தெரிவிக்கும் போது அது நேர் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தி மனதை மகிழ்விக்கும். மேலும் இந்த மூன்று நட்சத்திர நாளில் காதலர்கள்- தங்களது காதலை பெற்றோர்களிடத்தில் எடுத்துரைத்தாலும் அவர்களும் சம்மதம் தெரிவித்து, திருமணத்தை நிச்சயகித்து, காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வர்.
அதனால் காதலிக்கும் இளைஞர்களும் இளைஞிகளும், காதலிக்க விருப்பமுள்ள இளைஞர்களும், இளைஞிகளும் மேலே குறிப்பிட்ட மூன்று நட்சத்திர நாளில் உங்களது காதலை தெரியப்படுத்தி, திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு காதலை ஆயுள் முழுவதும் அனுபவித்து மகிழலாம்.
உடனே எம்மில் சிலர் காதலைப் பற்றி நேர் நிலையான கருத்துக்களை தெரிவித்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. ஆனால் எந்த நாளில் காதலை தெரிவிக்கக் கூடாது? என்பதையும் குறிப்பிட்டால் அதுவும் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பர்.
இதற்கும் எம்முடைய ஜோதிட நிபுணர்கள் பயனுள்ள குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். உங்களது ஜாதகத்தில் உடைப்பட்ட நட்சத்திரங்கள் என குறிப்பிடப்படும் சூரிய பகவானின் நட்சத்திரங்களான கிருத்திகை- உத்திரம்- உத்திராடம், செவ்வாய் பகவானின் நட்சத்திரங்களான மிருகசீரிடம் - சித்திரை -அவிட்டம், குரு பகவானின் நட்சத்திரங்களான புனர்பூசம்- விசாகம்- பூரட்டாதி என ஒன்பது நட்சத்திரங்கள் வரும் நாளில் உங்களின் காதலை உங்களின் விருப்பத்திற்குரிய இணையிடம் தெரிவிக்காமல் இருப்பது தான் நல்லது. அதையும் கடந்து தெரிவித்தால் பல்வேறு காரணங்களால் அந்த காதலில் விரிசல் ஏற்படலாம். பிரிவு உண்டாகலாம். அதையும் கடந்து திருமணம் வரை சென்றால் அதன் பிறகு விவாகரத்தும் நிகழலாம்.
ஆதலால் காதலித்து திருமணம் செய்து கொண்டு நல் முறையில் இல்லறம் வாழ வேண்டும் என விரும்புபவர்கள் மேலே குறிப்பிட்ட மூன்று நட்சத்திர நாளைத் தெரிவு செய்து கொண்டு, தங்களது காதலை தெரிவித்து, காதல் ஏற்கப்பட்டு, பெற்றோர்களால் அங்கீகரிக்கப்பட்டு, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தொகுப்பு சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM