(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
மக்கள் விடுதலை முன்னணியின் சட்டத்தரணி சுனில் வடகல தொழிற்சங்கத்தினரிடமிருந்து 55 இலட்சம் ரூபா பெற்றதாக அமைச்சர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. ஒரு சதம் கூடப் பெறாமலே அவர் தொழிற்சங்கத்தினருக்காக முன்னிலையாகுகிறார்.
குற்றச்சாட்டை முன்வைத்த அமைச்சர் மாத்தறை மாவட்டத்தில் கூட்டத்தை நடத்த வழங்கிய நிதியை மோசடி செய்ததாக ஆளும் தரப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள் எனத் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
மக்கள் விடுதலை முன்னணியின் சட்டத்தரணி சுனில் வடகல தொழிற்சங்கத்தினரிடமிருந்து 55 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு வழக்குகளுக்கு முன்னிலையாகுவதாக அமைச்சர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்திக் கொண்டு பொய்யுரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
சட்டத்தரணி சுனில் வடகல தொழிற்சங்கத்தினரிடமிருந்து ஒரு சதம் கூடப் பெறாமல் அவர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாகுகிறார்.இந்த அமைச்சர் அவரது வாய்ப் பேச்சுக்களை மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும்.பாராளுமன்றத்தில் ஏதும் பேசலாம் என்பதற்காகப் பிறர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது.
மாத்தறை மாவட்டத்தில் அரசியல் கூட்டத்தை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதியை இந்த அமைச்சர் மோசடி செய்ததாகவும்,கூட்டத்துக்குக் கட்சி ஆதரவாளர்களை அழைத்து வரவில்லை என்றும் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எம்மிடம் குறிப்பிடுகிறார்கள்.ஆகவே உங்களின் குப்பைகளை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள் பிறிதொரு தரப்பினர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM