பங்குகள் ஒருமுகப்படுத்தலுக்காக பங்குதாரர்களின் அனுமதியைப் பெற்றுள்ள அமானா வங்கி

24 Jul, 2024 | 12:23 PM
image

அமானா வங்கியின் ஏற்கனவே காணப்படும் ஒவ்வொரு 10 சாதாரண வாக்குரிமை பங்குகளும், தலா 1 சாதாரண வாக்குரிமை பங்காக ஒருங்கிணைப்பதற்கு பங்குதாரர்களின் அனுமதி கிடைத்துள்ளதாக கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கு அமானா வங்கி அறிவித்துள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட அதிவிசேட பொது ஒன்றுகூடலின் போது இதற்கான விசேட தீர்மானம் ஏகமனதாக எய்தப்பட்டது. 

இந்த ஒருங்கிணைப்பின் காரணமாக, அமானா வங்கி சாதாரண வாக்குரிமை பங்குகளில், ஏற்கனவே காணப்பட்ட 5,511,257,461 பங்குகளுடன் ஒப்பிடுகையில், 551,125,746 பங்குகள் காணப்படும். ஒருங்கிணைக்கும் செயன்முறை மற்றும் CDS பதிவுகளை மெருகேற்றும் செயற்பாடுகளுக்காக அமானா வங்கியின் பங்குகளின் பரிவர்த்தனை ஜுலை 8 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்பதுடன், ஜுலை 15ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கும். 

ஒருங்கிணைப்புக்கான அனுமதி தொடர்பில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஒருங்கிணைப்புக்கான அனுமதியை வழங்கியமைக்காக எமது பங்குதாரர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். இந்த நகர்வினூடாக பங்கு விலை தளம்பல்களை குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், இதர வங்கிகளுடன் ஒப்பீட்டை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும். மேலும் மேம்படுத்தப்பட்ட முதலீட்டாளர் விகிதங்களை காண்பிப்பதுடன், சந்தையில் அமானா வங்கியின் பங்குகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக அமைந்திருக்கச் செய்யும்.” என்றார். 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் என்பதுடன், இதர வங்கிகளுடன் ஒப்பீட்டை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும். மேலும் மேம்படுத்தப்பட்ட முதலீட்டாளர் விகிதங்களை காண்பிப்பதுடன், சந்தையில் அமானா வங்கியின் பங்குகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக அமைந்திருக்கச் செய்யும்.” என்றார். 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது. 

 

அஸ்கி அக்பரலி – தவிசாளர் - அமானா வங்கி பிஎல்சி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நோய்க்கிருமிகளினால் பரவும் நோய்களைப் பற்றிய ஆராய்ச்சியை...

2025-06-19 19:09:28
news-image

புதிய முகமாக விளங்கும் Zesta-வின் விளம்பர...

2025-06-19 15:41:05
news-image

இலங்கை முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில்...

2025-06-18 17:29:14
news-image

உலகளாவிய நிலைத்தன்மை அங்கீகாரத்தின் இரண்டாவது ஆண்டை...

2025-06-18 13:28:22
news-image

செலான் ஹரசர, பிரத்தியேக சலுகைகள் ,...

2025-06-18 13:21:37
news-image

John Keells Properties-TRI-ZEN நிர்மாணச் செயற்திட்டத்தின்...

2025-06-18 12:42:10
news-image

ஒரியன்ட் பைனான்ஸ் இப்போது ஜனசக்தி பைனான்ஸ்...

2025-06-17 11:25:11
news-image

இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து கொழும்பு...

2025-06-16 15:06:21
news-image

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை,...

2025-06-12 16:30:51
news-image

LOLC குழுமத்தில் ரூபா. 41 பில்லியன்...

2025-06-12 12:29:00
news-image

AIA பொசன் வந்தனா - யாத்ரீகர்களுக்கான...

2025-06-12 12:14:32
news-image

மலைநாட்டு தலைநகரில் உயர் கல்வி மாற்றத்திற்கு...

2025-06-12 12:34:32