கொவிட் காலத்தில் முஸ்லீம் உடல்கள்பலவந்தமாக தகனம் - மன்னிப்பு கோரும் அரசாங்கத்தின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

23 Jul, 2024 | 03:07 PM
image

கொவிட் 19 பெருந்தொற்று காலத்தில் இலங்கையில் முஸ்லீம்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்காக முஸ்லீம்களிடமும் ஏனையவர்களிடமும்; மன்னிப்பு கோரும் அரசாங்கத்தின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

இது தொடர்பாக அரசாங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

கொவிட் பெருந்தொற்றினை எவ்வாறுகையாளவேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட வழிகாட்டுதல்களில் கொவிட் வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் உடல்களை  அகற்றுவதற்கு தகனம் பாதுகாப்பான வழிமுறை என  தெரிவிக்கபட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட்டினால் மரணித்த 276 முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன 2021 பெப்ரவரியில் கடுமையான அறிவுறுத்தல்களுடன் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ஜூலை 2021 இல், ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நீர் வழங்கல் அமைச்சினால் கொழும்பு மற்றும் கண்டி நீர்வாழ் சூழல்களில் SARS-CoV-2 வைரஸை அடையாளம் காண ஆற்று நீர், மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் நீர் மற்றும் பிற ஆய்வுகள் தொடங்கப்பட்டன. மேற்பரப்பில் உள்ள நீரில் வைரஸ் இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நீர் தொழில்நுட்பத்திற்கான சீனா-இலங்கை கூட்டு ஆராய்ச்சி மற்றும் விளக்க மையத்தால் SARS-CoV-2 வைரஸ் தரை உள்ளிட்ட நீர் ஆதாரங்களுக்கு பரவுவது குறித்து ஆய்வு செய்த இரண்டாவது ஆய்வு மார்ச் 2024 இல் நிறைவு செய்யப்பட்டதுமற்றும்

மலம் மற்றும் சிறுநீர் ஆகியவை வைரஸ் பரவுவதற்கான முதன்மை ஆதாரம் ஆனால்பாதுகாப்புடன் புதைப்பதால் பரவாது என்பது உறுதி செய்யப்பட்டது.

இதன்படி, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் சார்பில் மன்னிப்பு கோருவதற்காக முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17