இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, இந்த வருடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சித் திட்டங்களை குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களை மையமாகக் கொண்டு அண்மையில் நடத்தியது.
இதனூடாக நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோருக்கு நிதியறிவை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.
HNB Finance இன் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு அணுகுமுறையின் கீழ் கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முயற்சியாளர்களின் நிதி அறிவை மேம்படுத்த முடிந்துள்ளது.
HNB Financeஇன் திறன் அபிவிருத்தித் துறைத் தலைவர் அனுர உடவத்த, இந்தத் தொடர் நிதியறிவு நிகழ்ச்சிகளை நடத்தினார், இதில் நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோர் வணிகக் கணக்கு பராமரிப்பு, கடன் நிர்வகிப்பு, இலாபத்தின் ஒரு பகுதியை மீள் முதலீடு செய்தல், வணிக செலவு நிர்வகிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்து கொண்டனர்.
சமீபத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில் 300க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தொழில்முனைவோர்களில் மிகவும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை முன்வைத்த தொழில்முனைவோருக்கு பரிசுகளை வழங்கவும் HNB Finance நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதவிர, இந்நிறுவனம் உருவாக்கிய "வளர்ச்சிக்கான நிதி அறிவு" கையேடு இங்கு வந்த அனைத்து தொழில்முனைவோருக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM