(நா.தனுஜா)
சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் தேர்தலின் பின்னர் தாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான மீள்பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றியமைக்கப்போவதாக கூறுகின்றன.
ஆட்சிபீடம் ஏறும் அரசாங்கம் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முற்படுகையில், முன்னைய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மாற்றியமைக்கக்கூடும். தேர்தலின் பின்னர் தமக்கான நிவாரணங்கள் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் உயர்வாகக் காணப்படும்.
இருப்பினும் நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அடுத்து இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. அதனைத்தொடர்ந்து பேணுவதற்கும், மேம்படுத்துவதற்கும் தற்போதைய மறுசீரமைப்புக்களைத் தொடர்வது அவசியமாகும் என உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளர் கிரெகரி ஸ்மித் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய தேர்தல்கள் நடைபெறவுள்ள பின்னணியில் நாட்டின் பொருளாதார நிலைவரம் குறித்து விளக்கம் வகையில் யூடியூப் தளமொன்றின் கலந்துரையாடலில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இதற்கு முன்னர் இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கின்றது. இருப்பினும் 2009 ஆம் ஆண்டின் பின்னரான பொருளாதார நெருக்கடி மற்றும் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியவையே சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட இரண்டு மிகமோசமான சந்தர்ப்பங்களாகும்.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது மிகக்கடினமான செயன்முறையாகும். நெருக்கடிகளின்போது நாணய நிதியம் உதவ முன்வந்தாலும், அதற்கு ஈடாக மிகக்கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும். எதுஎவ்வாறிருப்பினும் இலங்கை கடந்தகால நெருக்கடியிலிருந்து தற்போது படிப்படியாக மீட்சியடைய ஆரம்பித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 6 சதவீத பொருளாதார வளர்ச்சி உள்ளடங்கலாக மிகச்சிறந்த நேர்மறை குறிகாட்டிகளையே காண்பித்தது. இருப்பினும் 2018 ஆம் ஆண்டளவில் அதற்கு முன்னர் பெற்ற அதிகளவிலான கடன்கள் சுமையாக மாறத்தொடங்கிவிட்டது.
இப்பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் - 19 பெருந்தொற்றுப்பரவல் மற்றும் அதன்விளைவாக சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏற்பட்ட வருமான இழப்பு என்பன தூண்டுதலாக அமைந்திருந்தாலும், நீண்டகாலமாக மறுசீரமைப்பு செயன்முறைகளில் நிலவிய பின்னடைவு, பெருமளவிலான வரிக்குறைப்பு, ஏற்றுமதிகள் மீதான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடு, வெளிநாட்டு முதலீடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பன இந்நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டில் பல்வேறு துறைகளிலும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதில் அரசாங்கம் சிறப்பாக செயற்பட்டுவருகின்றது. இருப்பினும் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கு அம்முதலீட்டாளர்களைக் கவரக்கூடிய பொருத்தமான தெரிவுகள் மற்றும் சலுகைகளை வழங்கவேண்டும்.
அதேவேளை கடந்த சில மாத அவதானிப்புக்களின் பிரகாரம் இலங்கை உரியவாறான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து, சரியான பாதையில் பயணிக்கின்றது. குறிப்பாக நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதற்குத் தேவையான மறுசீரமைப்புக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
அவசியமான சட்டங்கள் உருவாக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இருப்பினும் இம்மறுசீரமைப்புக்களையும், சட்டங்களையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதே கடினமானதாகும். இருப்பினும் அவற்றை உரியவாறு அமுல்படுத்துவதன் ஊடாக நிலையான நேர்மறை மாற்றத்தை அடைந்துகொள்ளமுடியும்.
மேலும் சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் தேர்தலின் பின்னர் தாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான மீள்பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றியமைக்கப்போவதாக கூறுகின்றன.
ஆட்சிபீடம் ஏறும் அரசாங்கம் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முற்படுகையில், முன்னைய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மாற்றியமைக்கக்கூடும். தேர்தலின் பின்னர் தமக்கான நிவாரணங்கள் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் உயர்வாகக் காணப்படும். இருப்பினும் நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அடுத்து இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. அதனைத்தொடர்ந்து பேணுவதற்கும், மேம்படுத்துவதற்கும் தற்போதைய மறுசீரமைப்புக்களைத் தொடர்வது அவசியமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM