புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய செல்களை அழிப்பதற்காக வைத்திய நிபுணர்கள் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளை மேற்கொண்டு நிவாரணம் தருவார்கள். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, அதனால் சில பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும்.
கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் புற்றுநோய் செல்கள் மட்டும் அழிக்கப்படாமல் அதன் அருகே உள்ள திசுக்களில் இருக்கும் ஆரோக்கியமான செல்களும் அழிக்கப்படுகிறது. குறிப்பாக எம்முடைய உடலில் வேகமான வளர்ச்சியை கொண்டிருக்கும் தலை முடிக்கான செல்கள் - தோலிற்கான செல்கள் மற்றும் வாய், தொண்டை, உணவு குழாய் , வயிறு, குடல் போன்ற பகுதிகளில் இருக்கும் எபிதீலியல் செல்கள் எனப்படும் சளி சவ்வு செல்களும் பாதிக்கப்படுகிறது. இதனால் வாய்ப்புண், வலி, சளி அழற்சி, உணவுக் குழாய் அழற்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
குறிப்பாக பெரும்பாலானவர்களுக்கு மியூகோசிடீஸ் எனப்படும் வாய்ப்புண்கள் அதிக அளவில் ஏற்படும். இதற்கு தற்போது கிரையோதெரபி எனும் நவீன சிகிச்சை நல்ல பலனை அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மியூகோசா எனும் சளி ஜவ்வு - உங்களுடைய வாய், தொண்டை, உணவுக் குழாய், வயிறு, குடல் ஆகிய பகுதிகளில் மெல்லிய அளவில் அடுக்காக இருக்கும். இது மியூகோசா எனும் சளியை உருவாக்கும் எபிதீலியல் செல்களால் ஆனது. கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இந்த செல்களும் பாதிக்கப்பட்டு வாய்ப்புண் உண்டாகிறது.
வலி, வாயில் ரத்தம், ஈறு அல்லது நாக்கு ஆகிய பகுதிகளில் புண்கள், வாய் அல்லது தொண்டை பகுதியில் வலி, திட திரவ உணவுகளை சாப்பிடும் போது அசௌகரியத்தை உணர்வது, பசியாறிய பிறகு எரிச்சல் அல்லது வலி போன்ற உணர்வு எழுவது, நாக்கு அல்லது வாய் பகுதியில் மென்மையான வெண்ணிற திட்டுகள் உருவாவது, உமிழ் நீரில் மாற்றம், சளி அதிகரிப்பு ஆகியவை இத்தகைய பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.
தலைப்பகுதி, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ளும் போதும், எலும்பு மஜ்ஜை மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் போதும், கீமோதெரபி மருந்துகள் காரணமாகவும் உங்களுக்கு மியூகோசிடிஸ் எனும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
வேறு சிலருக்கு வாய் மற்றும் பல் சுகாதாரத்தை முழுமையாக பராமரிக்கவில்லை என்றாலும், புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை பாவிப்பதாலும், மது அருந்துவதாலும், நீர் சத்து பற்றாக்குறையின் காரணமாகவும், சிறுநீரக நோய் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதனை வைத்தியர்களிடம் சிகிச்சை பெறும் போது அவர்கள் பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். அதனைத் தொடர்ந்து கிரையோதெரபி எனும் நவீன சிகிச்சையை வழங்கி இதற்கான முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.
வைத்தியர் இந்துஜா
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM