(எம்.மனோசித்ரா)
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் பயனைப் பெற்றுப் பெற்றுக் கொள்வதற்காக 4 இலட்சத்து 55 697 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை மீளாய்வு செய்யும் பணிகளை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
முதலாம் கட்டத்தில் 18 இலட்சத்து 54 518 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், அவர்களில் சுமார் 2 இலட்சம் பயனாளிகள் தேசிய அடையாள அட்டை இன்மை மற்றும் வங்கி கணக்குகளை ஆரம்பிக்க முடியாமையால் தமக்கான கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாகவும் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அஸ்வெசும திட்டத்தில் முதற்கட்டத்திற்காக 34 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றுள் 1,854,518 பயனாளர்கள் நன்மைகளைப் பெறத் தகுதி பெற்றிருந்தன. அவர்களில் குறைந்த வருமானம் பெறுபவர்களில் 30 சதவீதமானோருக்கு 4 வகைகளின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டது.
பாதிப்பிற்குள்ளான பிரிவில் உள்ள பயனாளி குடும்பங்களுக்கு 5000 ரூபாவும், நிலைமாறக்கூடிய குடும்பங்களுக்கு தலா 2500 ரூபாவும் வழங்கப்பட்டது. இந்த பிரிவினருக்கு ஆரம்பத்தில் கடந்த மார்ச் வரை மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, ஜூன் 2024 இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கமைய நிலைமாறக்கூடியவர்கள் பாதிப்பிற்குள்ளானவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் 5000 ரூபா கொடுப்பனவை ஜூலை முதல் டிசம்பர் வரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏழை மற்றும் மிகவும் ஏழை ஆகிய இரு பிரிவினருக்கும் 2026 ஜூன் வரை 15 000 கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அஸ்வெசும பயனாளி குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் ஆகியோர்களுக்கு 7500 மற்றும் 3000 ரூபா என்ற அடிப்படையில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதற்கமைய கடந்த 15ஆம் திகதி முதல் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்குச் சென்று தகவல் சேகரிக்க ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கையடக்க தொலைபேசி செயலியின் ஊடாக அவர்கள் தகவல்களை சேகரிப்பார்கள்.
இதன் போது மக்கள் சரியான தகவல்களை வழங்க வேண்டும். முதற்கட்டமாக விண்ணப்பித்து தகுதி பெற்றவர்களில் சுமார் 135 000 பயனாளிகள் வங்கி கணக்குகளை ஆரம்பிக்க முடியாமல் உள்ளனர். அவர்கள் உட்பட 2 இலட்சம் பயனாளிகள் தேசிய அடையாள அட்டை இன்றியும் உள்ளனர். எனவே இவர்கள் தமது பிரச்சினைகளை நிவர்த்தி செய்து கொண்டால் அவர்களுக்கான கொடுப்பனவுகள் நிலுவையுடன் வழங்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM