எம்.எம்.மின்ஹாஜ்

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பிரதான கூட்டம் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மே தின கூட்டத்திற்கு ஏனைய கூட்டங்களை பார்க்கிலும் இலட்ச கணக்கான மக்களை கொழும்பிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சி பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பிரதான கூட்டம் இம்முறையும் கெம்பல் மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்தின் பிரதான பேரணி மாளிகாவத்தை பி.டி சிறிசேன மைத்தானத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. பின்னர் மருதானை, புன்சி பொரளை ஊடாக பொரளை கெம்பல் பார்க் மைதானத்தை வந்தடையும் வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்டவுள்ளன. அதிகளவிலான பாதுகாப்பும் பலப்படுத்தப்படும்.

மேலும் சிறிய மற்றும் சிறுப்பான்மை கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். கூட்டு எதிரணியின் மே தின கூட்டம் காலி முகத்திடலில் நடத்தப்படவுள்ளன. ஆகவே அதிகளவிலான கூட்டத்தை காண்பிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஐ.தே.க பிரிநிதிகள் செயற்பட்டு வருகின்றனர். 

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தின் போது இலட்ச கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கட்சியின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.