இன்றைய சூழலில் நோயில்லாத மனிதர்கள் இல்லை கடன் இல்லாத மனிதர்களும் இல்லை என சொல்லலாம். கடனும், நோயும் மனிதனை முன்னேற்றத்திற்கான சிந்தனையை சிந்திக்க விடாமல் தடை செய்து, அவர்களை கடனை பற்றியும், கடன் கொடுத்தவர்களை பற்றியும் , அவர்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் குறித்து மட்டுமே சிந்திக்க வைக்கும். இதனால் கடன் வாங்குவதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும்.
கடன் வாங்கி விட்டால் அதனை அடைத்து விட்டு தான் வேறு விடயங்களை யோசிக்க வேண்டும் என எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். கடன் என்பது எம்முடைய வளர்ச்சியை சூட்சுமமாக தடை செய்யும் வலிமையான காரணி என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
அதனால் கடன் வாங்கினால் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தத் தருணத்தில் கடனால் சிக்கித் தவிப்பவர்களை அதிலிருந்து மீட்பதற்கான எளிய பரிகாரங்களையும், வழிமுறைகளையும் எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : 20 கிராம்பு ( லவங்கம்) - 20 ஏலக்காய் - சிட்டிகை அளவு குங்குமப்பூ - இருபது ரூபாய் தாள் அல்லது நாணயம் 20 - ஒரு மஞ்சள் வண்ண துணி - 20 சிவப்பு வண்ணரோஜா பூ .
ஒரு வெள்ளிக்கிழமையை தெரிவு செய்யுங்கள். அதில் சுக்கிர ஓரை என குறிப்பிடப்படும் காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் அல்லது தோராயமாக ஆறு முப்பது மணிக்கு+ மேலே சொன்ன பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு, முதலில் ஒரு மஞ்சள் வண்ண துணியை விரித்து கொண்டு, அதில் 20 கிராம்புகளை ( லவங்கங்களை) முதலில் வைத்து விட வேண்டும்.
அதன் பிறகு சுத்தமான உடையாத முழுமையாக இருக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 20 ஏலக்காய்களை வைத்து விட வேண்டும். அதன் மீது சிட்டிகை அளவு குங்கும பூவை வைக்க வேண்டும். இதன் மீது இருபது ரூபாய் தாள் இருபதினையும் வைக்க வேண்டும். இவை அனைத்தையும் முடிச்சிட்டு உங்களுடைய பணப் பெட்டி அல்லது நகை பெட்டிக்குள் சுக்கிர ஓரை தருணத்தில் வைத்து விட வேண்டும்.
உடனே எம்மில் சிலர் இருபது சிவப்பு வண்ண ரோஜாவை என்ன செய்வது? எனக் கேட்பீர்? நீங்கள் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த எளிய வழிமுறையை மேற்கொள்வதற்கு முன்பாக அதற்கு முந்தைய தினமான வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு மேல் அருகில் உள்ள பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் ஆஞ்சநேயரை வணங்கி, அங்கு இறை ஊழியம் செய்யும் தொண்டரிடம் 20 சிவப்பு வண்ண ரோஜா பூக்களை கொடுத்து, ஆஞ்சநேயரின் பாதத்தில் சமர்ப்பித்து விடுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். அவர் உங்களது கோரிக்கையை ஏற்று ஆஞ்சநேயரின் பாதத்தில் அல்லது அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப சிவப்பு வண்ண ரோஜா மலரை சாற்றுவார்.
அந்த தருணத்தில், 'ஆஞ்சநேயா! கடன்களை தீர்ப்பதற்காக நாளை சுக்கிர ஓரையில் ஒரு எளிய பரிகாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறேன். இதற்கு உங்களுடைய பரிபூரண ஆசி வேண்டும். வருவாயை அதிகரித்து, கடன் தொல்லையிலிருந்து மீள அருள் புரிய வேண்டும்' என பிரார்த்திக்க வேண்டும்.
அந்தப் பிரார்த்தனையை நிறைவு செய்த பிறகு, அடுத்த நாள் காலை சுக்கிர ஓரையில் மேலே சொன்ன எளிய பரிகாரத்தை செய்தால் உங்கள் கடன் விரைவில் அடைபடுவதை அனுபவத்தில் காண்பீர். இந்த பரிகாரத்தை மேற்கொள்ள தொடங்கும் முன் உங்களது கடன் சுமையை பட்டியலிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
ஓராண்டிற்கு பிறகு உங்களின் கடன் சுமை குறைந்து, சேமிப்பு தொடங்கி இருப்பதை அனுபவத்தில் காண்பீர்கள். இந்த வலிமை மிகுந்த பரிகாரத்தை பரிபூரண நம்பிக்கையுடன் ஒருமுகமான மனதுடன், பிரார்த்தித்து செய்தால் இந்த பிரபஞ்சம் உங்களது கோரிக்கையை ஏற்று, நல்லருள் புரிந்து கடனிலிருந்து மீள்வீர். மகிழ்ச்சி அடைவீர். வருவாயிலிருந்து சேமிக்கவும் தொடங்கி இருப்பீர்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM