இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பம் - இலத்தரனியல் சாதனங்கள் - சமூக வலைதளங்கள்- ஆகியவற்றின் ஆதிக்கத்தில் தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்குள் நாளாந்தம் தோன்றும் ஐம்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணங்களில் எதிர்மறை எண்ணங்கள் தான் அதிகமாக இருக்கின்றன.
இத்தகைய எதிர்மறை எண்ணங்கள் ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி, ஆரோக்கியத்தை சீர்குலைக்கிறது. இதன் காரணமாக இளம் வயதிலேயே நீரிழிவு நோய், மாரடைப்பு, உயர் குருதி அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி உயிரிழப்பை எதிர்கொள்கிறார்கள்.
இந்நிலையில் எதிர்மறை எண்ணங்களை நீக்குவதற்கும், அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கும் வைத்திய நிபுணர்கள் நரம்பியல் தியானம் எனும் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள் என பரிந்துரைக்கிறார்கள்.
நரம்பியல் தியானம் என்பது எம்முடைய உடலில் உள்ள உள்ளுறுப்புகளுக்கு ஓய்வு அளித்து, அதில் இருக்கும் நச்சுக்களை அகற்றுவதாகும். பொதுவாக எம்முடைய உடலில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் சிறிய அளவிலான வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்த படி, பயிற்சியினை செய்து அதனை தளர்வடைய செய்ய வேண்டும்.
அதன் பிறகு அமைதியாக இருக்கும் ஒரு இடத்தில் அமர்ந்து, உங்களது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் உள்நோக்கி பார்வையிட வேண்டும்.
உதாரணமாக கால் கட்டை விரல், கட்டைவிரல், நகங்கள், பாதங்கள், கால் விரல்கள், கணுக்கால், மூட்டு என ஒவ்வொரு பகுதியாக உங்களது கவனத்தை செலுத்தி, அந்த பகுதி ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பதனை எண்ணங்களின் வழியாக உன்னிப்பாக உற்று நோக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் இது போன்ற எண்ணங்களின் வழியாக உன்னிப்பாக உற்று கவனித்தால் அந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் அதன் மீது இருக்கும் சுமையில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஓய்வு பெறும். அத்துடன் புத்துணர்ச்சியையும் பெறும். இதனை நாளாந்தம் இருபது நிமிடம் வரை மேற்கொள்ளலாம்.
இந்த நரம்பியல் தியானத்தை தொடங்கும் போது தொடக்கத்தில் எண்ண அலைகளில் சம சீரற்ற நிலை உண்டாகும். நீங்கள் நரம்பியல் தியானத்திற்காக அமர்ந்திருக்கும் போது உங்களது எண்ணங்கள் மனதை போல் அலை பாய்ந்து கொண்டிருக்கும். அதனை இத்தகைய பயிற்சியை தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது தான் அதனை எளிதாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து , அதனை கையாள முடியும்.
தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் இத்தகைய நரம்பியல் தியானத்தை மேற்கொள்ளும் போது நாளாந்தம் தோன்றும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணங்களில் எதிர்மறை எண்ணங்களின் அளவு குறைவதை உணர்வீர்கள். மேலும் நேர் நிலையான எண்ணங்கள் அதிகரிப்பதையும் உணரலாம். அதன் பிறகு நீங்கள் எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் மன அழுத்த பாதிப்பிலிருந்து முழுமையாக விடுதலை பெறுவீர்கள்.
அத்துடன் உங்களது உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் மேம்படும் சிந்திக்கும் திறன், கவனிக்கும் திறன், நினைவு திறன், செயலாற்றும் திறன் ஆகியவை மேம்பட்டு உங்களது செயலாற்றல் அதிகரித்து, நீங்கள் முன்னேறுவதை காணலாம். அத்துடன் ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்த பாதிப்பு உங்களை தாக்காதவாறு தற்காத்துக் கொள்ள முடியும்.
வைத்தியர் வேணி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM