(எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதால் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் தேர்லுக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. அத்துடன் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6வருடங்கள் என யாராவது வாதிட்டால் பாராளுமன்ற பதவிக்காலமும் 6வருடங்களாகவே அமையும். இருந்தபோதும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக்காலத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தேர்தல்களும் இடம்பெற்றுள்ளதால், இதுதொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட வாய்ப்பில்லை என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீதி அமைச்சில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் தொடர்பாக ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானியில் பிரசுரமாகி 7நாட்களுக்கு பின்னரே அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.பாராளுமன்றத்துக்கு அதனை சமர்ப்பித்து 14நாட்களுக்குள் யாருக்காவது குறித்த சட்டமூலம் தொடர்பில் சந்தேகம் எழுந்தால் அவர்கள் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யலாம். உயர் நீதிமன்றம்,14நாட்களுக்கு பிறகு வரக்கூடிய 3வாரங்களில் குறித்த மனு தொடர்பில் தனது வியாக்கியானத்தை சபாநயகருக்கு அனுப்பிவைக்கும்.
உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் எப்போதும் சவாலுக்குட்படுத்திய மனு அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது சட்டமூலத்தை அனுமதித்துக்கொள்ள பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் என்றே தெரிவிக்கிறது.
19ஆம் திருத்தம் முன்வைக்கப்பட்டபோதும் ஜனாதிபதியின் மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை 6வருடங்களில் இருந்து 5 வருடாமாக குறைப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என சிலர் வாதிட்டனர்.
என்றாலும் உயர் நீதிமன்றம், இதுதொடர்பில் சட்ட வரைப்புக்குள் இருந்து மிகவும் சிறந்த தீர்பொன்றை வழங்கி இருந்தது. அதாவது, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை 6வருடங்களில் இருந்து 5வருடங்கள் வரை குறைப்பதால், அந்த நிறுவனங்களுக்கான அதிகார காலம் குறைவடைந்து மக்களுக்கான உரிமை மேலும் விரிவாக்கப்படுகிறது. அதனால் மக்களின் உரிமை விரிவாக்கப்படுவதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல தேவையில்லை என தீர்ப்பளித்திருந்தது.
இதன் பிரகாரம் 22ஆம் திருத்தத்தில் 83ஆம் உறுப்புரையிலும் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாகவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் உயர் நீதிமன்றம் ஏற்கனவே இது தொடர்பில் தீர்ப்பளித்திருப்பதால், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதில் நீதிமன்றத்துக்கு சந்தேகம் இல்லை. அதனால் 22ஆம் திருத்தம் ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றே எனது நம்பிக்கையாகும். அவ்வாறு யாராவது பதவிக்காலம் 6 வருடங்கள் என வாதிட்டால், பாராளுமன்றத்தின் பதவிக்காலமும் 6 வருடங்களாக வேண்டும். அதேநேரம் 19ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதியின் மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து குறைத்து 5 வருடங்களாக திருத்தி அமைத்த பின்னர், பாராளுமன்ற தேர்தலும் ஜனாதிபதி தேர்தலும் இடம்பெற்றிருக்கிறது.
எனவே அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு செய்து, தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. என்றாலும் தேர்தல் ஒன்று இ்டம்பெற உள்ள நிலையில், அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவருவது, அரசியல்வாதிகள் தொடர்பில் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது அந்தளவு நல்லதில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM