இந்திய திரையுலகின் பான் இந்திய நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கும் நடிகையும், தேசிய விருது பெற்ற நடிகையுமான கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
எள்ளல் மற்றும் நையாண்டி பாணிலான நகைச்சுவை வகைமை திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இயக்குநர் சுமன் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கு கீர்த்தி சுரேஷ் ஏனைய பொலிவுட் மற்றும் டோலிவுட் நட்சத்திரங்களை போல் இரண்டு மணி நேரம் தாமதமாக பங்கு பற்றி செய்தியாளர்களின் அதிருப்தியை சம்பாதித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
இவ்விழாவில் இயக்குநர் சுமன் குமார் பேசுகையில், '' ரகு தாத்தா படத்தின் டீசரை பார்த்துவிட்டு அனைவரும் இது இந்தி திணிப்பை பற்றிய அரசியல் படமா? என கேட்கிறார்கள். டீசர் என்பது ரசிகர்களின் கவனத்தை கவர்வதற்காகவும், படத்தினை விளம்பரப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தும் ஒரு வணிக ரீதியிலான உத்தி மட்டும் தான். ஆனால் படம் அதைப் பற்றியது அல்ல. இந்த திரைப்படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை தான் நகைச்சுவையாக பேசுகிறது.'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM