குருணாகலில் லொறி மோதி வயோதிபர் உயிரிழப்பு : சாரதி கைது

22 Jul, 2024 | 01:00 PM
image

குருணாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி - குருணாகல் வீதியில்  வேஉட பகுதியில் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகலிலிருந்து கலகெதர நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்த வயோதிபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது படுகாயமடைந்த வயோதிபர் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணேகொட, வேஉட பகுதியில் வசிக்கும் 74 வயதுடைய வயோதிபரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் மாவத்தகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து லொறி சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2 கோடி ரூபா பணத்துடன் இரு...

2026-07-22 18:45:15
news-image

2023 முதல் 2026 மார்ச் வரை...

2026-07-22 18:39:34
news-image

அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய 4 பேர்...

2026-07-22 18:00:52
news-image

பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான 50 வினாக்கள்...

2026-07-22 17:36:01
news-image

விடைபெறுகிறார் சீனத்தூதுவர்

2026-07-22 17:35:45
news-image

முல்லைத்தீவில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், பிரத்தியேக...

2026-07-22 17:11:45
news-image

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அபிவிருத்தி குறித்து...

2026-07-22 17:11:08
news-image

புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையைப் பாதுகாத்து சிறிய...

2026-07-22 17:10:52
news-image

நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல...

2026-07-22 18:47:49
news-image

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை: நீதியமைச்சும்...

2026-07-22 17:08:22
news-image

கடற்படைத் தளபதி - இந்திய பாதுகாப்பு...

2026-07-22 16:32:22
news-image

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை...

2026-07-22 16:52:41