நான்கு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
18 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றம், அவரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், அவரது வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதித்து உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இன்று (22) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கூரகல தொல்லியல் அமைவிடம் தொடர்பாக 2016 இல் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக மாநாடொன்றில் இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்தமைக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM