ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆறாவது போட்டியில் குஜராத் லையன்ஸ் அணியை எதிர்கொண்ட சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி 8 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

குஜராத் அணி சார்பில் டுவைன் ஸ்மித் 37 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் ரஷிட் கான் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 136 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 15.3 பந்து 140 ஓட்டங்களை குவித்து வெற்றிபெற்றது.

ஹைதராபாத் அணி சார்பில் வோர்னர் 76 ஓட்டங்களையும், ஹென்ரிக்கியுஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரஷிட் கான் தெரிவுசெய்யப்பட்டார்.