ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு உப கிளையாக தம்புள்ளையில் ஆரம்பிக்கப்படவுள்ள 'சிட்டி கெம்பஸ் ஒப் டெக்னோலஜி' திறப்பு விழா நிகழ்வு நேற்று (21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனின் தலைமையில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய பாதுகாப்பு இராஜங்க அமைச்சர்,
நெடுஞ்சாலைகள், பாலங்கள் போன்ற பாரிய பௌதீக அபிவிருத்தித் திட்டங்களால் மாத்திரம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததன் விளைவாகவே அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்தப் பல்கலைக்கழக அமைப்பை இங்கு உருவாக்கத் தீர்மானித்தோம்.
அத்தோடு, எதிர்வரும் ஜனவரி மாதம் கற்கைநெறிகளுக்கு மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதை ஆரம்பிக்கவுள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக முகாமைத்துவ சபையின் தலைவரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன, வண. மகாசங்கத்தினர், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், அதன் பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானாராச்சி, பிரதி உபவேந்தர்கள், பீடாதிபதிகள், பீடங்களின் உறுப்பினர்கள், நிர்வாகப் பணியாளர்கள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கெடட் மாணவர்கள், பாடசாலை கெடட் மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM