இவ்வாரத்துக்குள் வேட்புமனு தாக்கலுக்கான தினத்தை ஆணைக்குழு அறிவிக்குமென எதிர்பார்க்கின்றோம் - எஸ்.எம்.மரிக்கார்

Published By: Vishnu

21 Jul, 2024 | 09:31 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித்தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எவ்வித தடையும் இன்றி அதனை முன்னெடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இவ்வாரத்துக்குள் வேட்புமனு தாக்கலுக்கான தினத்தை ஆணைக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித்தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எவ்வித தடையும் இன்றி அதனை முன்னெடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய இவ்வாரம் வேட்புமனு தாக்கலுக்கான தினத்தை அறிவிக்கவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் சட்டத்துக்கமைய திங்கள் தவிர்ந்த செவ்வாய் - வெள்ளிக்கிழமை நாட்களில் அதனை அறிவிக்க முடியும்.

வேட்பாளர்கள் ஏதாவதொன்றை பேசிக் கொண்டிருக்காமல் கடனை மீள செலுத்த ஆரம்பித்த பின்னர் அதனை எவ்வாறு செலுத்துவது என்ற திட்டத்தை முன்வைக்க வேண்டும். அந்நிய செலாவணியின் ஊடாக வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டமாகும். அநுரகுமார திஸாநாயக்கவும், ரணில் விக்கிரமசிங்கவும் தமது திட்டங்களை முன்வைக்க வேண்டும்.

பொருட்களின் விலைகளைக் குறைத்து, வரி சுமைகளைக் குறைத்து தமக்கு நிவாரணம் வழங்கக் கூடிய தலைவர் ஒருவரையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரச வருமானத்தை டொலர்களால் அதிகரித்தால் மாத்திரமே இதனை செய்ய முடியும். முன்னர் பொதுஜன பெரமுனவை பிரசித்தப்படுத்தியவர்களே தற்போது அநுரகுமார திஸாநாயக்கவை வெளிநாட்டுக்கு அழைத்து அவரை பிரபலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தேர்தலின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்ற நிலைமையே இவர்களுக்கும் ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41