பங்களாதேசில் வன்முறைகள் வெடிப்பதற்குகாரணமான அரசாங்கவேலைவாய்;ப்பில் ஒதுக்கீட்டு முறையை பங்களாதேஸின் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
அரசாங்க வேலைவாய்ப்புகளில் 30 வீதம் சுதந்திரபோராட்ட வீரர்களின் குடும்பத்தவர்கள் உட்பட பல தரப்பினருக்கு எதிராகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சுதந்திரப்போராட்ட வீரர்களின் குடும்பத்தவர்களிற்கு ஐந்து வீதத்தினை மாத்திரம் ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பங்களாதேசில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
93வீதவேலைவாய்ப்பை திறமை அடிப்படையில் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐந்து வீதத்தினை முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் 2 வீதத்தினை சிறுபான்மை சமூகத்தினருக்கும் ஒதுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1971ம் ஆண்டு முதல் நாட்டில் காணப்படும் அரசாங்க வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு முறையை கைவிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மாணவர்கள் தரத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என தெரிவிக்கின்றனர்.
1971 ம் ஆண்டு சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிள்ளைகள் உட்பட விசேட குழுவினருக்கு ஆயிரக்கணக்கான அரசவேலை வாய்ப்புகளை ஒதுக்கும் நடைமுறை பங்களாதேசில் காணப்படுகின்றது.
இந்த முறையின் கீழ் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனக்குழுக்களை சேர்ந்தவர்களிற்கு அரசவேலைகளில் ஒதுக்கீடு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
2018 இல் இந்தஒதுக்கீட்டு முறை இடை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இந்நிலையில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு 30 வீத ஒதுக்கீட்டை மீள வழங்கவேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது .
இது புதிய ஆர்ப்பாட்டங்களிற்கு வழிவகுத்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனங்களை சேர்ந்தவர்களிற்கு ஆறு வித ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வம்சாவளியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்க்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM