தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படைப்புகளில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'தங்கலான்' திரைப்படமும் ஒன்று. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதியை பட தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி, ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. படத்தின் முன்னோட்டத்தில் சூனியக்காரி வேடமும், தோற்றமும் இடம்பிடித்து இருப்பதால் ... ஒரு பிரிவினர் 'பா. ரஞ்சித் இயக்கியிருக்கும் பேய் படம் தான் தங்கலான்' என்றும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் சீயான் விக்ரமின் தோற்றமும், அண்மையில் வெளியான முதல் பாடலும், படத்தின் படத்தினை பற்றிய ரசிகர்களின் பார்வையை மாற்றி அமைத்ததுடன் எதிர்பார்ப்பையும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் பா. ரஞ்சித் - சீயான் விக்ரம் - ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா கூட்டணியில் தயாராகி இருக்கும் தங்கலான் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. மேலும் 'தங்கலான்' சீயான் விக்ரம் ஒற்றையாளாக சுமந்திருக்கும் படைப்பு என தெரிய வருவதால்... அவருடைய ரசிகர்கள் இதனை உற்சாகத்துடன் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM