ஹிக்கடுவ ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த 16 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று (20) காணாமற்போன நிலையில், இன்று (21) காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த மாணவர் தனது 8 நண்பர்களுடன் ஹிக்கடுவ ஆற்றுக்கு நீராடச் சென்றுள்ளார்.
ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த இந்த 9 பேரில் 5 பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.
அதன் பின்னர், அப்பகுதி மக்கள் நீரில் மூழ்கிய ஐந்து பேரில் 4 பேரை மீட்டதோடு, ஒருவர் காணாமல்போயுள்ளார்.
நீரில் மூழ்கியவாறு காணாமல்போன அந்த மாணவனே இன்று காலை ஹிக்கடுவ ரயில் பாலத்துக்கு அருகில் உள்ள ஆற்றுப் பகுதியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவர் கரந்தெனியவில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்றுவந்தவர் என்றும் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM