(ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடத்தில் நீர்வழிப் படகுப்பாதை பயணிகள் தங்குமடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது.
குருக்கள்மடம்-மண்டூருக்கடையிலான வாவியுடான நீர்வழி படகு பாதை பயணிகள் இக்கட்டிடத்தையே தங்குமடமாக பயன்படுத்தி வந்தனர். இக்கட்டிடம் உடைந்து விழுந்துள்ளதால் பயணிகள் கொட்டும் மழையில் நனைந்தே பாதையை எதிர்பார்த்து நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
ஸ்தலத்திற்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கேகோபாலரத்தினம் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் அரசாங்க அதிபர் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளருடன் தொடர்பு கொண்டு உடனடியாக தற்காலிக நிலையமொன்றை அமைத்து தருவதாகவும் ஜனவரி மாதத்தில் புதிய தங்குமடத்தை அமைக்க முடியுமெனவும் தெரிவித்தார்.