கடந்த 24 மணிநேரத்தில் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 11 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துகள் நேற்று சனிக்கிழமை (20) மதவாச்சி, கெக்கிராவ, அனுராதபுரம் மற்றும் பயாகல பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.
மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதியில் முச்சக்கரவண்டியும் எரிபொருள் நிரப்பப்பட்ட பௌசரும் நேருக்கு நேர் மோதியதில் 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
மஹமல்கொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே உயிரிழந்துள்ளதுடன் இவ்விபத்து தொடர்பில் பௌசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கெக்கிராவ - கணேவல்பொல வீதியில் உழவு இயந்திரம் வீதியோரத்தில் உள்ள கல்வெட்டில் மோதி கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் வீதியைக் கடந்த நபர் மீது லொறியொன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, காலி - கொழும்பு வீதியின் பயாகல புகையிரத நிலையத்துக்குத் திரும்பும் சந்தியில் வீதியைக் கடந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த நபர் பயாகல பிரதேசத்தை சேர்ந்த 71 வயதானவர் ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM